நடிகை கஜோலின் மகளா இது? புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

3 years ago 387

நடிகை கஜோல் திரையுலகில் மிகவும் முக்கியமானவர். இவர் பாலிவுட்டிலும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இன்றுவரை இவர் தமிழில் நடித்த மின்சாரக் கனவு படம் இன்றும் பலருக்கும் பேவரட் படம்.

இதேபோல் தமிழில் வேலையில்லா பட்டதாரி பாகம் 2 லும் நடித்திருந்தார். திரையுலகில் கொடிகட்டிப் பறந்த போதே, கஜோல் பிரபல பாலிவுட் முன்னணி நடிகரான அஜய் தேவ்கனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு நைஸா என்ற ஒரு மகளும் உள்ளார்.


கஜோலின் மகள் நைசா சமீபத்தில் தன் பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பெர்த்டே வாழ்த்துச் சொல்லி, கஜோல் அவரது புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். 

கூடவே அதில் தன் மகள் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டதைக் குறிக்கும்வகையில், ‘நீ இன்றும் எனது தோல்களில் இருப்பதைப் போல் நான் உணர்கிறேன். நீ எவ்வளவு வளர்ந்தாலும், எப்பொழுதும் எனது இதயத் துடிப்பாகவே இருப்பாய். அது என்றும் மாறாது என அதில் எழுதியுள்ளார்.

நெட்டிசன்கள் அடடே நடிகை கஜோலுக்கு இவ்வளவு பெரிய மகளா? என பதிவிட்டு வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...