நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமா?... போட்டோவால் ரசிகர்கள் குழப்பம்...!

3 years ago 367

பாலிவுட்டின் முடிசூடா ராணியான ஸ்ரீதேவியையே கவர்ந்த அழகி தீபிகா படுகோன். கண் அழகின் காந்த வீச்சிலும், அசத்தலான நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர். 

6 ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி, கடந்த 208ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். 

சினிமாவில் வெற்றிகரமான ஜோடியாக வலம் வரும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடியின் வாரிசை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 


இந்த ஜோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு மூன்றாண்டு திருமண நாளை கொண்டாடியுள்ள நிலையில், அனைவரும் குட்டி தீபிகா அல்லது குட்டி ரன்வீர் குறித்த எதிர்பார்ப்பை காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் தீபிகா படுகோனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. பிங்க் கலர் சல்வாரில் அழகிய புன்னகையுடன் வயிற்றை குனிந்து பார்த்த படி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள தீபிகா படுகோனே. கேப்ஷனாக பிப்ரவரி என பதிவிட்டுள்ளார். 

மில்லியன் ரசிகர்களை கவர்ந்த கன்னக்குழி புன்னகையுடன் தீபிகா பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் ஒருவேலை அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ? என்ற சந்தேகம் கிளம்பியது. 

ஆனால் அவர் பிப்ரவரி மாதத்தை வரவேற்று தான் அப்படி பதிவிட்டுள்ளாராம். அடுத்தடுத்து படவேலைகளில் தீவிரமாக இறங்க உள்ள தீபிகா இந்த மாதத்தை ஆவலுடன் வரவேற்று தன்னுடைய கேன்டிட் போட்டோவை பதிவிட்டுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...