நம்பவே முடியல... இவ்ளோ சீக்கிரம் போயிட்டீங்களே... புனித் திடீர் மரணம்.. பிரபலங்கள் உருக்கம்!

3 years ago 463

நடிகர் புனித் ராஜ்குமாரின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கன்னட சினிமாவின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் புனித் ராஜ்குமார். இன்று காலை வழக்கம் போல் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் புனித். டிக்கெட்... ரசிகர்கள் ஷாக் !

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதாக கூறி தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமாரின் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு கன்னட சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் என ஒட்டு மொத்த திரைத் நட்சத்திரங்களும் தங்களின் அதிர்ச்சியையும் இரங்கலையும் பதிவு செய்து வருகின்றனர். 

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மம்மூட்டி பதிவிட்டுள்ள டிவிட்டில் புனித் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன். இதயமே நொங்கி விட்டது. அவரது மறைவு சினிமாத் துறைக்கு பேரிழப்பு. அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அவரது அன்புக்குரியவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் புனித் ராஜ்குமாரின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகையான தமன்னா பாட்டியாவும் நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் அதிர்ச்சியும் பெரும் துக்கமும் அடைந்துள்ளேன்... வார்த்தையே வரவில்லை.. என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் பதிவிட்டுள்ள டிவிட்டில், இதயமே உடைந்துவிட்டது... அவர் ஒரு பெரிய குடும்பத்திலிருந்து வந்த மிகவும் எளிமையான மனிதராக இருந்தார்!

என் இசையை எவ்வளவு பிடிக்கும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் மிகவும் இனிமையாகவும் பாசமாகவும் இருந்தது. நல்லவர்களுக்கு ஏன் இப்படி நடக்கிறது!? அவரது குடும்பத்திற்கும் தைரியத்தை கொடுக்க வேண்டும்.. ரெஸ்ட் இன் பீஸ் சார்.. என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்டுள்ள டிவிட்டில், அன்பான நடிகர்கள் மற்றம் ஜென்டில்மேன்களில் ஒருவர். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சமாளிக்கும் சக்தியை புனித் சார் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்களின் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.. என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் நிவின் பாலி பதிவிட்டுள்ள டிவிட்டில், புனித் மரணமடைந்த செய்தியை கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். ரெஸ்ட் இன் பீஸ்.. புனீத்ராஜ்குமார் சார். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.. என பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரித்திவி ராஜ் பதிவிட்டுள்ள டிவிட்டில் இந்த விஷயம் ரொம்பவே காயப்படுத்துகிறது. அமைதியாக ஓய்வெடுங்கள் சூப்பர் ஸ்டார்.. இந்த துக்கத்தை கடந்து வர அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் தைரியத்தை கொடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் பதிவிட்டுள்ள டிவிட்டில் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணத்தால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். தனது அபாரமான உழைப்பால் மக்களின் மனதைக் கவர்ந்த ஒரு சக்திவாய்ந்த நடிகர். குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பதிவிட்டுள்ள டிவிட்டில், அதிர்ச்சி, இதயமே நொறுங்கி விட்டது. நிலைகுலைந்து விட்டேன்.. புனித் ராஜ்குமார் சீக்கிரம் போய்விட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய! குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் கண்ணீர் இரங்கல்கள். ஒட்டுமொத்த கன்னட/இந்தியத் திரையுலகத்திற்கே பெரும் இழப்பு. இந்த துயரமான இழப்பைச் சமாளிக்க அனைவருக்கும் வலிமை கிடைக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில், உங்களின் பணிவு, மனிதாபிமானம், உங்களுடைய எதார்த்தம்.. வாழ்வின் மீதான அன்பு ஆகியவை வெற்றி பெற விரும்புவோருக்கு பாடமாக இருக்கும்... என பதிவிட்டுள்ளார்.

நம்மை விட்டு செல்லும் வரை சில தருணங்களை நாம் மதிப்பதில்லை அப்பு.... கன்னட திரைப்படத் துறையால் இதை புரிந்து கொள்ளவே முடியாது... இவ்வாறு பதிவிட்டுள்ளார். மேலும் புனித் தன்னுடன் செல்பி எடுக்கும் போட்டோவையும் அவர் ஷேர் செய்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...