நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிந்து விடுவார்கள்... ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

3 years ago 574

கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக நயன்தாரா இருந்து வருகிறார். 10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை. 

அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். 

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த பெருமையும் நயன்தாராவுக்கு உண்டு. 

இப்படி உச்ச நடிகையாக இருக்கும் அவரது சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது. காதலில் அவர் தொடர்ந்து காயப்பட்டு வருகிறார். 

2006-ல் வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன் அவரது முதல் காதல் துளிர்த்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அந்த காதல் முறிந்து போனது. 

 அதன்பிறகு 2009-ல் பிரபுதேவாவுடன் நயன்தாராவின் இரண்டாவது காதல் மலர்ந்தது. வில்லு படத்தை பிரபுதேவா இயக்கியபோது அதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ஜோடியாக சுற்றினார்கள்.

நயன்தாரா மதம் மாறி பிரபுதேவாவை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த காதலும் முறிந்து போனது. 

தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நானும் ரவுடி தான் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார்.  

அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. காதல் போர் அடிக்கும்போது திருமணம் செய்து கொள்வோம் என்று விக்னேஷ் சிவன் ஒரு முறை தெரிவித்திருந்தார். 

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் என்று லாக்டவுன் நேரத்தில் இரண்டு முறை வதந்தி பரவியது. 

 இந்நிலையில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் நயன்தாரா, விக்கி காதல் பற்றி பேசியிருக்கிறார். 
 

அதாவது, நயன்தாரா, விக்னேஷ் சிவனின் காதல் இன்னும் ஓராண்டு கூட தாக்குப் பிடிக்காது, பிரியப் போகிறார்கள் என்று கூறியிருக்கிறார். 

பயில்வான் ரங்கநாதனின் பேச்சு நயன்தாரா ரசிகர்களை கவலையும், எரிச்சலும் அடைய செய்துள்ளது. 

திரையுலகினர் பற்றி அவ்வப்போது ஏதாவது பரபரப்பாக தெரிவித்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன். அவர் நயன்தாரா பற்றி பேசுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடதக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...