நாங்க எடுத்தது எதுவுமே ஆபாச படம் இல்லை.. 87 ஆபாச படங்களில் நடித்த நடிகை விளக்கம்!

3 years ago 804

ஆபாச படம் எடுத்ததாக தொழிலதிபரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா திங்கட்கிழமை இரவு மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் தயாரிப்பில் வெளியான ஆபாச படங்களில் நடித்த பிரபல கவர்ச்சி நடிகை கெஹனா வசிஸ்த் எனும் வந்தனா திவாரி வெளியிட்டுள்ள விளக்க வீடியோ வைரலாகி வருகிறது.

ஆல்ட் பாலாஜி நிறுவனத்தின் கவர்ச்சி தயாரிப்பான கந்திபாத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலானவர் தான் இந்த கெஹனா வசிஸ்த் எனும் வந்தனா திவாரி. கென்ரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் பல ஆபாச படங்களில் இவர் நடித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 87 ஆபாச படங்களில் கெஹனா நடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால், தான் நடித்தது அனைத்தும் போர்ன் படங்கள் இல்லை என்றும் அவை வேறு ஒரு பிரிவில் தான் வருகிறது என வாதாடி ஜாமினில் விடுதலை ஆனார்.

ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை கெஹனா, நாங்க எடுத்த எந்த படமும் போர்ன் படங்கள் இல்லை என்றும் அவை அனைத்தும் எரோடிகா படங்கள் என்றும் சூப்பரான விளக்கம் கொடுத்து அவர் வெளியிட்ட வீடியோவையும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மும்பை போலீசார் தான் உலகிலேயே சிறந்த போலீசார் என்பது எங்களுக்கு தெரியும். இந்த வழக்கில் இருந்து நிச்சயம் நாங்கள் விடுதலை பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. 

எரோடிகாவுக்கும் போர்னுக்கும் உள்ள வித்தியாசம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு எங்களுக்கு சரியான நீதி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜ் குந்த்ராவின் உதவியாளரான உமேஷ் கமாத் மற்றும் கெஹானா இருவருமே இணைந்து ஏகப்பட்ட சின்ன சின்ன ஆபாச படங்களை வித்தியாச வித்தியாசமாக எடுத்து ஹாட் ஷாட் எனும் செயலி மூலம் பரப்பி உள்ளார்கள் என்றும், ஆபாச படங்கள் வெளியான உடன் அவர்களுக்கான சம்பளத்தை ராஜ் குந்த்ரா வழங்குவார் என்றும் போலீசார் விசாரணையில் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆபாச படங்கள் அல்லது அவர் சொல்வது போல காம படங்களில் (Erotica) நடித்து வரும் நடிகை கெஹனா வசிஸ்த் ஆசிய அளவில் பிகினி அழகி பட்டம் வென்றவர். வெப்சீரிஸ்கள் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் மற்றும் விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...