நான் பட்ட கஷ்டமெல்லாம் நாசமா போச்சே, எவன் பார்த்த வேலைடா: கொந்தளிக்கும் நடிகர்

3 years ago 432

புஷ்பா படத்தில் வரும் பாடல் ஆன்லைனில் கசிந்ததால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் அல்லு அர்ஜுன். இதையடுத்து எடிட்டிங் நடக்கும் இடத்திற்கு படக்குழுவினர் செல்போன் எடுத்து வர தடை விதிக்குமாறு கூறியிருக்கிறாராம்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் புஷ்பா. செம்மரக் கட்டை கடத்தல் தொடர்பான படத்திற்காக அல்லு அர்ஜுன் மிகவும் மெனக்கெட்டு நடித்திருக்கிறார்.

புஷ்பா படத்தின் முதல் பாடலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்தது படக்குழு. ஆனால் அவர்கள் அந்த பாடலை வெளியிடும் முன்பு அது ஆன்லைனில் கசிந்து படக்குழு தான் அதிர்ச்சியில் இருக்கிறது.

பாடல் கசிந்துவிட்டதால் அல்லு அர்ஜுன் கடும் கோபத்திலும், அதிர்ச்சியிலும் இருக்கிறாராம். இதையடுத்து எடிட்டிங் பணி நடக்கும் இடத்திற்கு படக்குழுவினர் செல்போன் எடுத்து வர தடைவிதிக்குமாறு தெரிவித்துள்ளாராம்.

இதற்கிடையே பாடல் கசிவு தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. படக்குழு அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் புஷ்பா. அந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா தான் ஹீரோயின். படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். புஷ்பா- தி ரைட் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகவிருக்கிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...