தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. 600 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா.
நிஜவாழ்க்கையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் இவர் பிரசவம் நெருங்கி வருவதன் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக பேசப்பட்டு வந்தது.
இவர் பிரசவத்தின் காரணமாக ஜெயிலுக்குப் போவது போல காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வெண்பா சீரியலில் இருந்து விலகி அதை உறுதி செய்யும் வகையில் அவர் வீட்டு வேலைக்காரி வேடத்தில் நடித்து வரும் புஷ்பா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ ஒன்றை பதிவு செய்து மிஸ் யூ பரீனா என குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் இது எந்த அளவிற்கு உண்மை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.