பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பிரபல இயக்குனர் மீது கவர்ச்சி நடிகை புகார்.!

4 years ago 196
பிரபல நடிகைகள் உட்பட பலர் நடிகர் , இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோரின் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி மீ டுவில் புகார் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஷெர்லின் சோப்ரா தன்னை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக பிரபல நடிகரும் ,இயக்குனருமான சாஜித்கான் மீது புகார் அளித்துள்ளார்.

இவர் ஹவுஸ்புல், ஹவுஸ்புல் 2, தர்னா ஸ்ருதி யெ போன்ற இந்தி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஷெர்லின் சோப்ரா கூறுகையில்,நான் சாஜித்கானை 2005-ம் ஆண்டு  சந்தித்ததாகவும்,அப்போது அவர் என்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும்,அப்போது  நான் அவரிடம் இதற்காக இங்கு வரவில்லை என்று தெரிவித்ததாகவும் கூறினார். 

இந்த பாலியல் குற்றச்சாட்டை அப்போது கூறி இருந்தால் அவருக்கு பாலிவுட்டில் உள்ள சூப்பர் ஸ்டார்கள் ஆதரவாக பேசி இருப்பார்கள். 

இந்தி திரையுலக மாபியா வலிமையானது. நான் சாஜித் மீது குற்றஞ்சாட்டவில்லை. நடந்த உண்மையை கூறுகிறேன். என் தந்தை இறந்து துக்கத்தில் இருந்த நேரத்தில் அவர் என்னை  படம் குறித்து பேசுவதாக கூறி  அழைத்து தவறாக நடந்து கொண்டார். 

நான் பல முறை மறுத்தும் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்'' என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே சாஜித் மீது பல பாலிவுட் நடிகைகள் பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக கூறி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...