பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெர்மனி மாடல் மதுமிதா கமலுக்கு கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

3 years ago 415

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். 

எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் பிக் பாஸ் 5-ன் மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா களமிறங்கியுள்ளார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தற்போது ஆடை வடிவமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். மாடலிங்கில் மிகுந்த ஆர்வமுடைய மதுமிதா, தமிழ் பொழுதுப்போக்கு துறையிலும் தற்போது கால் பதித்திருப்பதாகக் கூறினார்.

பிக் பிரதர் நிகழ்ச்சியை விட பிக் பாஸ் நிகழ்ச்சியினால் ஈர்க்கப்பட்டதால், இந்நிகழ்ச்சிக்கு தான் வர வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அதோடு ஒரு ஹேண்ட் மேட் ஆடையை தொகுப்பாளர் கமல் ஹாசனுக்கு வழங்கினார் மதுமிதா. அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட கமல், ஒருநாள் நிகழ்ச்சிக்கு அணிந்து கொள்வதாக உறுதியளித்தார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...