பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட மோதல்.. காயங்களுடன் வெளியேறிய நமிதா– வெளியானது அதிர்ச்சி தகவல்

3 years ago 836

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நமிதா மாரிமுத்து. 

திருநங்கையான இவர் இந்த நிகழ்ச்சி திருநங்கைகளில் சார்பாக பங்கேற்க இருப்பதாக கூறினார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருந்தது. ஒரு வாரம் மட்டுமே இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் வீட்டிற்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் காயத்துடன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். 

நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நமிதா மாரிமுத்து பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனை காரணமாக இரு தரப்பும் எந்தவித புகாரையும் அளிக்காதன் காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர். 

அவருக்கு கொரானா என தகவல் பரவிய நிலையில் அது உண்மை இல்லை என மருத்துவமனை நிர்வாகம் பதிலளித்துள்ளது. தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் செலவில் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...