பிக்பாஸில் கலந்துகொள்ளும் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர்? லீக்கான தகவலால் பரபரப்பு

3 years ago 397

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இதுவரை நான்கு சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது. தமிழில் வெளியான அனைத்து பிக்பாஸ் சீசனும் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. 

நடிகர் கமல்ஹாசன் நான்கு சீசன்களையும் தொகுத்து வழங்கினார். 5-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார்.இந்நிலையில் சீசன் 5-க்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

கமல்ஹாசன் சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5-ன் ப்ரோமோ வெளியாகியது. புதிய லோகோவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் சீசன் 5 ஒளிபரப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.  


பிக்பாசில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து அதிக செய்திகள் வெளியாகி வருகின்றன. இவ்வாறாக வெளியாகும் அனுமான போட்டியாளர்கள் பட்டியலில் பெரும்பாலும் சரியாக அமைந்துவிடும். 

தற்போது பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா தேஸ்பாண்டே வரும் பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறபட்டு வருகிறது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளைப் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான தொகுப்பாளரும் கூட. 

எனவே பிரியங்கா பிக்பாஸில் கலந்துகொள்ள இருப்பதாக வெளியாகும் செய்திகளைக் கேட்டு அவரது ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். 

ஷகிலாவின் மகள் மிலா, குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி, சுனிதா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சன் டிவி செய்தி வாசிப்பாளர், மைனா நந்தினி, நடிகர் ஜான் விஜ,ய் எம்எஸ் பாஸ்கர், ரம்யாகிருஷ்ணன், டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர், ஜி பி முத்து உள்ளிட்டோரும் இந்த சீசனில் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் பிக்பாஸ் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் போட்டியாளர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...