பிக்பாஸ் 5 எப்போது? - வெளியான 2ஆவது ப்ரோமோவால் ரசிகர்கள் உற்சாகம்

3 years ago 209

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது, இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. கடந்த செப்டம்பர் 3-ம் தேதி, முதல் ப்ரோமோ வெளியான நிலையில், இன்று இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

”ஒரே களேபரம்தான் போங்க, நான் சமையல சொன்னேன்” என கமல் இந்த ப்ரோமோவில் தெரிவித்துள்ளார்.

இந்த ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக ஆரம்பித்துள்ளது. விரைவில் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்படும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.


நாங்களும் சமையல தான் நெனச்சோம் சார் 😜 #BiggBossTamil Season 5 | விரைவில்.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/MO8k1gOH1G

— Vijay Television (@vijaytelevision) September 11, 2021
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...