தற்போது ஹிந்தியில் பிக்பாஸ் ஓடிடி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அக்ஷரா சிங். இவர் சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அக்ஷராசிங் கூறிய போது தனது முன்னாள் காதலர் தன் மீது ஆசிட் வீச சிலரை அனுப்பி வைத்ததாகவும் அதிலிருந்துதான் தப்பியதாகவும் கூறியுள்ளார்.
தனக்கும் தனது முன்னாள் காதலருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிய முடிவு செய்ததாகவும் இதனை அடுத்து அவரிடம் இருந்து தனக்கு பல மிரட்டல்கள் வந்ததாகவும் ஒரு கட்டத்தில் தன்னை கொலை செய்ய மற்றும் தன்னுடைய திரையுலக வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர என் முகத்தின் மீது ஆசிட் வீச சிலரை அனுப்பி வைத்ததாகவும் அவர்களிடம் இருந்து தான் அதிர்ஷ்டவசமாக தப்பித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.