பிரகாஷ் ராஜுக்கு 2 நடிகைகள் ஆதரவு.... நடிகர் சங்க தேர்தலில் திடீர் டுவிஸ்ட்

3 years ago 465

தெலுங்கு நடிகர் சங்க தலைவராக இருக்கும் நரேஷ் பதவி காலம் முடிவதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை ஜீவிதா, விஷ்ணு மஞ்சு, ஹேமா ஆகியோர் தனித்தனி அணிகளாக களத்தில் இறங்கியிருந்தனர்

இந்நிலையில், தற்போது திடீர் டுவிஸ்டாக தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக கூறிவந்த நடிகைகள் ஹேமா, ஜீவிதா ஆகியோர் பிரகாஷ்ராஜின் அணியில் இணைந்து விட்டனர். 

இதனால் அவரது அணியின் பலம் கூடி உள்ளது. அதன் காரணமாக தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜுக்கும், விஷ்ணு மஞ்சுவிற்கும் இடையே நேரடி போட்டி நடக்க இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது அணி சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியலை தற்போது அறிவித்து உள்ளார். 

அதில், நடிகர் ஸ்ரீகாந்த் நிர்வாக துணைத் தலைவராகவும், ஹேமா மற்றும் பேனர்ஜி துணைத் தலைவர்களாகவும், ஜீவிதா பொதுச் செயலாளராகவும் தனது அணி சார்பில் போட்டியிடப்போவதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...