பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ஏற்கனவே 2 இந்தி படங்களில் நடித்துள்ள அவர், தற்போது புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.
ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அவர் சிபிஐ அதிகாரியாக நடிப்பதாகவும், இப்படத்துக்கு பட்டா என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்படத்தில் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீசாந்தும் சன்னி லியோனும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.