பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சியில் ரசிகர்கள்

3 years ago 758

பிரபல மலையாள சீரியல் மற்றும் திரைப்பட நடிகர் ரமேஷ் வலியசாலா தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போது நாடக பின்னணயில் இருந்து தொலைக்காட்சி துறைக்கு வந்து கடந்த 22 ஆண்டுகளாக சின்னத்திரை துறையில் தீவிரமாக பணியாற்றி உள்ள ரமேஷ் இரண்டு நாட்கள் முன் தனது படப்பிடிலிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரமேஷ் வலியசாலாவின் உடலை கைப்பற்றிய தம்பனூர் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கொரோனா ஊரடங்கு காரணமாக அவருக்கு சில நிதி பிரச்னைகள் இருந்ததால் அவர் தற்கொலை முடிவுக்கு வந்தாரா என்று ரீதியில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ரமேஷ் வலியசாலா அவரது இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இதனிடையே அவரது உடல் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...