ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்

3 years ago 311

விக்ரம் வேதா, இவன் தந்திரன், நேர்கொண்ட பார்வை படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் சமீபத்தில் மாதவனுடன் இணைந்து நடித்த மாறா படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்து கலியுகம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்தி நடிகர் வருண் தவான் – நடாஷா தலால் குறித்து இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்த ஷ்ரத்தா, தனது பதிவில் சினிமா துறையில் நடிகைகள் தங்கள் திருமணத் திட்டங்களை அறிவிக்கும்போது கிடைக்கும் பொதுவான எதிர்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை பார்த்து எரிச்சலடைந்த வருண் தவானின் ரசிகர்கள், அவரை கடுமையாக திட்டினர். இந்த கமெண்டுகளுக்கு பதில் அளித்த ஷ்ரத்தா, “நான் நேற்று ஆணாதிக்கம் குறித்த ஒரு கருத்தை கூறினேன், ஒரு நடிகர் திருமணம் செய்துகொள்வதால் வேலையில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நான் சொன்னபோது இது உங்கள் அனைவருக்கும் தவறாக தெரிகிறது, ஆனால் ஒரு நடிகையை அவ்வாறு கூறும்போது அது ஏன் தவறாக தெரியவில்லை? நடிகைகளும் தங்கள் ரசிகர்கள் மீதான அன்பை வெளிப்படுத்துகின்றனர்’ என குறிப்பிட்டார்.

பொதுவாக நடிகைகள் திருமணம் செய்துகொள்ளும்போது அவர்கள் தொடர்ந்து நடிப்பார்களா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...