வந்த முதல் நாளே பாடம் எடுத்த இமாம் அண்ணாச்சி… டவுட்னா என்னை கேளுங்க !

3 years ago 356

இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களிலும் ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக பெண் போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர்.

ஆனால் இந்த சீசனில் 7 ஆண் போட்டியாளர்கள், 10 பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

பிக் பாஸ் இல்லத்தின் முதல் நாளே, கமல் 4 வேடத்தில் நடித்த மைக்கல் மதன காமராஜன் திரைப்படத்தில் வந்த வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் என்ற பாடல் ஒலித்தது. 

இதற்கு 18 போட்டியாளர்கள் அனைவரும் கலக்கலாக ஆட்டம் போட்டு அனைவருக்கும் குட்மார்னிங் கூறினர். அப்போது, அக்ஷரா தாமிரை செல்வியை பார்த்து நீங்க ரொம்ப பாசிடிவ்வா இருக்கீங்க என்று கூறினார். 

பாசிடிவ்வுக்கு தாமிரை செல்விக்கு அர்த்தம் புரியாததால் அப்படினா என்ன என்று கேட்டார். உடனே அக்ஷரா டீம் மேட்டிடம் பாசிடிவ்னா தமிழ்ல என்ன என்று கேட்டார்.

அதற்கு ராஜு அப்படினா எதிர்மறை என்று பதில் சொல்கிறார், அதற்கு அது அர்த்தம் இல்லையே உனக்கு பஃர்ஸ்ட் English தெரியுமா என்று கேட்கிறார். ஒருவருக்கும் விளக்கம் தெரியாததால் நல்ல விதமாக என்றும், நீங்க ரொம்ப ஸ்வீட் என்று ஆள விடுங்கப்பா சாமி என்றவாரு கூறிவிடுகின்றனர்.

அப்போது அங்கு வரும் இமாம் அண்ணாச்சியிடம் அண்ணா பாசிடிவ்னா என்ன என்று கேட்கிறார்கள் உடனே அவர், நல்ல விதமாக என்று கூறுகிறார். வேறு எதுவும் டவுட் இருக்கா என்று கேட்கிறார். நைட் எத்தனை மணி ஆனாலும் தமிழில் டவுட் இருந்தா என்னை கேளுங்க என்று கூறினார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...