வருமான வரி செலுத்த முடியவில்லை... நடிகை கங்கனா வருத்தம்

3 years ago 393

இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கனா ரணாவத், ஒரு படத்தில் நடிக்க ரூ.12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். 

தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான ‘தலைவி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் இருக்கிறார். 

இந்நிலையில், வேலை இல்லாததால் வருமான வரி செலுத்த கஷ்டப்படுவதாக கங்கனா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் அதிக வருமான வரி செலுத்துகிறேன். என்னுடைய மொத்த வருமானத்தில் 45 சதவீதத்தை வருமான வரியாக செலுத்தி வருகிறேன். ஆனால் கடந்த வருடம் எனக்கு வேலை இல்லை. 

இதனால் வாழ்க்கையில் முதல் தடவையாக எனது வருமான வரியின் பாதி தொகையை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. நான் வரி செலுத்த தாமதம் செய்ததால் வட்டி விதித்துள்ளனர். ஆனாலும் இதனை வரவேற்கிறேன். இந்த காலம் வரி செலுத்தும் தனி நபர்களுக்கு கஷ்டமான காலமாக உள்ளது’’ என்று கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...