அபிஷேக் ராஜா இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவர் பற்றியும் ரிவ்யூ சொல்லத் தொடங்குகிறார். முதலில், ஐக்கி பற்றி பேசத் தொடங்கும் அபிஷேக், ஐக்கி பெயரிலிருந்து தலைமுடி வரை அனைத்தும் வித்தியாசம்.
பல முறை இந்த படத்தை லூப்பில் பார்த்தால் தான் படத்தின் டைட்டிலே புரியும் அந்த அளவுக்கு ஒரு வித்தியாசமான படம் என்று கூறினார்.
அடுத்ததாக தாமரைச்செல்வி பற்றி ரிவ்யூ கொடுத்த அபிஷேக் பட்டையை அடிச்சிட்டு ஊர ஏமாத்துறாங்க என்றார். இதனால், கோவமான தாமரைச்செல்வி தம்பி பட்டையை பற்றி பேசுனா எனக்கு கோவம் வந்துடும் என்றார்.
மேலும் அண்ணாச்சியை அழைத்த தாமரைச்செல்வி, அண்ணேன் இந்த தம்பி பட்டையை போட்டு ஊர ஏமாத்துராங்கனு என்னை பார்த்து சொல்கிறார் என்றார்.
உடனே இமான் அண்ணாச்சி அப்படியா சொன்னான்... போ... இந்த பையனுக்கு 2 லட்சம் ஓட்டுபோச்சு என்கிறார். இதையடுத்து தாமரைச்செல்வி வெற்றி வேல் முருகனுக்கு... வீர வேல் முருகனுக்கு என்று பாட்டுப்பாடுகிறார்.
பட்டையைப்பற்றி பேசினால் எனக்கு கோவம் வரும், சத்தியமா கோவம் அதைப்பற்றி பேசாதீங்க என்று தாமரைக் கூற, அபிஷேக் நான் அப்படித்தான் பேசுவேன் என்று.... ஏய் இப்போ பேசு... பேசுவா பேசுவா என்று தாமரையின் காலில் விழுகிறார்.
எங்கடா வீட்டில் சண்டை ஆரம்பமாகுமோ என்று நினைத்த நேரத்தில் அபிஷேக் தாமரையின் காலில் விழுந்து சண்டையை சமாதானமாக்கினார்.