விராட் கோலி - அனுஷ்கா சர்மா குழந்தையின் பெயர் என்ன?

3 years ago 332

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் - பாலிவுட்டின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி இத்தாலியில் கோலாகலமாக திருமணம் செய்தனர்.

தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி பதிவிட்ட ட்வீட் 2020ம் ஆண்டில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் என்ற சாதனையை படைத்தது. அனுஷ்கா சர்மாவிற்கு கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. 


இதையடுத்து சமீபத்தில் விராட் கோலியின் சகோதரரான விகாஸ் கோலி பதிவிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அது விராட் கோலி குழந்தையின் புகைப்படம் கிடையாது என்றும் விகாஸ் கோலி விளக்கம் அளித்திருந்தார். 

 

இதையடுத்து விராட் கோலி மகளின் முகத்தைக் காண ரசிகர்கள் காத்திருந்தனர். இன்று தங்களுடைய செல்ல மகளுக்கு பெயர் வைத்துள்ள விராட் - அனுஷ்கா ஜோடி, குடும்பமாக இருக்கும் க்யூட் போட்டோ ஒன்றையும் பதிவிட்டுள்ளனர். 

மகளுக்கு வாமிகா (Vamika) என்று பெயர் வைத்துள்ளனர். அனுஷ்கா சர்மா குழந்தையை கையில் வைத்திருக்க, தன்னுடைய மகளை விராட் கோலி மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...