விவாகரத்தான பெண்ணுடன் அஜித் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்

3 years ago 343

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பில்லா. 

அதன் பின்னர் பில்லா-2 என இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இதில் வில்லனாக நடித்திருப்பவர் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால். அதன் பின்னர் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தார்.

மேலும் அஞ்சான் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் பிரபல நடிகை மோனா சிங் உடன் காதலில் இருந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்னர் இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் இவர் ஆடை வடிவமைப்பாளர் நந்திதாவுடன் காதல் மலருக்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் தாஜ்மஹாலில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நந்திதா ஏற்கனவே டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...