வெளியானது பிக்பாஸ் சீசன் 5 முதல் புரோமோ - ஐந்து பேர் கேப்டன் பதவிக்கு போட்டி

3 years ago 345

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று தொடங்கி உள்ள நிலையில் சற்று முன் முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் இந்த வீட்டின் முதல் கேப்டன் யார் என்பதை தேர்வு செய்யும் அறிவிப்பை பிக்பாஸ் வெளியிடுகிறார். 

இந்த பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருக்க தகுதி உள்ளவர்கள் என்று நினைக்கும் போட்டியாளர்கள் கேப்டன் பதவிக்கு போட்டியிட முன் வரலாம் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார்

இதனை அடுத்து ஐந்து பேர் கேப்டன் பதவிக்கு போட்டியிடுவதற்காக முன்வருகின்றனர். அவர்களில் ராஜு ஜெயமோகன், நமீதா, சின்னபொண்ணு, பவானி மற்றும் நிரூப் ஆகிய 5 பேரும் போட்டியிடுவதாக அறிவிக்கின்றனர்.

அப்போது பிக்பாஸ் ’யார் யார் எந்தெந்த பிரிவின் கேப்டனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, ராஜூ ஜெயமோகன் தான் பாத்ரூம் பிரிவின் கேப்டன் என கூறுகிறார். 

இதனை அடுத்து ப்ரியங்கா அவரை, ‘அதுதான் இருப்பதிலேயே ஈஸியான வேலை’ என கலாய்த்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...