ஷங்கர் படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா... ஹீரோ யார் தெரியுமா?

3 years ago 432

 கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிரிக்பார்ட்டி’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். 

அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படங்கள் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றன.

தமிழில் இவர் நடித்துள்ள முதல் படம் சுல்தான். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ளது. இது தவிர இரண்டு பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு, ஒரு பிரம்மாண்ட பட வாய்ப்பு தேடி வந்துள்ளதாம். 

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க உள்ள புதிய படத்தில் ராஷ்மிகா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...