ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்கள் தானா?

3 years ago 482

தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது. 

100 நாட்கள் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பிக்பாஸில் செய்தியே ஆக்கிரமித்திருக்கும். 

அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த ரியாலிட்டி ஷோவை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஐந்தாவது சிந்தனையும் அவர் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

அக்டோபர் 3ஆம் திகதி தான் போட்டியில் பங்கேற்கவிருக்கும் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப் படுவார்கள். கமல்ஹாசன் தான் அவர்களை அறிமுகப்படுத்துவார். 

நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள். 



கடந்த முறையும் இப்படித் தான் நடந்தது. கொரோனா பாதிப்பின் காரணமாக 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்த பிறகே பிக் பாஸ் குழு அவர்களை உள்ளே அனுப்பும்.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்கவிருக்கும் போட்டியாளர்கள் குறித்த பட்டியல் இணையதளத்தில் கசிந்துள்ளது. குக் வித் கோமாளி கனி, தொகுப்பாளினி பிரியங்கா, ஷகிலாவின் மகள் மிலா, பாபா பாஸ்கர், இமான் அண்ணாச்சி, நிழல்கள் ரவி, பிரியா ராமன், கௌசல்யா, தொழிலதிபர் ரேணுகா பிரவின் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. 

அண்மையில் மிலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 ஸ்டார் ஹோட்டலில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது.

அதே போல மிலா, சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி, நடிகை ஷாலு ஷம்மு உள்ளிட்ட 5 பேர் ஹோட்டல் ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

எனவே அவர்கள் 5 பேரும் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. யாஷிகா ஆனந்த் நண்பர் நிரூப் நந்த குமாரும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...