தெலுங்கு படங்களில் நடித்ததால் பிரபலமான நடிகை அங்கிதா மஹாராணா. இவருக்கு இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து, தனது பெயரை அப்சரா ராணி என மாற்றிக்கொண்டார். ராம்கோபால் வர்மாவின் படத்தில் கவர்ச்சியாகவும் நடித்து இருந்தார்.
ஒடிசாவை சேர்ந்த பெற்றோருக்கு டேராடூனில் பிறந்த அப்சரா, சிறுவயதில் இருந்து மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு பின்னாளில் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் தனக்கு சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
இந்த பேட்டியில், "கன்னட சினிமாவில் படத்துக்கு நாயகியாக என்னை தேர்வு செய்து, கதை விவாதம் என ஹோட்டலுக்கு தனியாக வரச்சொன்னார்கள். நானும் ஹோட்டலுக்கு சென்ற போது, எங்களின் ஆசைக்கு இணங்கினால் வாய்ப்பு கொடுப்போம்" என்று தெரிவித்தார்கள்.
ஹோட்டலுக்கு நன் தனியாக செல்லாமல், பாதுகாப்பு கருதி அப்பாவையும் துணைக்கு அழைத்து சென்றேன். அவர்களின் பேச்சுக்களில் உள்ள எண்ணத்தை புரிந்துகொண்ட நாங்கள் வந்துவிட்டோம். தெலுங்கு சினிமாவில் இந்த தொல்லைகள் இல்லை" என்று தெரிவித்தார்.