எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா, இன்ஸ்டகிராமில் மாடர்ன் லுக்கில் தான் இருக்கும் படங்களை அதிகம் பகிர்ந்துள்ளார்.
கோலங்கள் சீரியலுக்குப் பிறகு இயக்குநர் திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார்.
2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு தொடர் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் நடிகை ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர்.
இதில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மதுமிதா நடித்து வருகிறார்.
கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்து வளர்ந்த மதுமிதா, அங்கேயே பள்ளி - கல்லூரி படிப்பை முடித்தார்.
புட்மல்லி என்ற கன்னட சீரியல் மூலம் நடிப்பை தொடங்கினார். பின்னர் அதே மொழியில் ஜெய் ஹனுமான் சீரியலில் நடித்தார்.
அதைத்தொடர்ந்து ‘மனசுனா மானசி’ என்ற தெலுங்கு சீரியலில் நடித்த மதுமிதா, பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியலில் நடித்தார்.
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர், தொடர்ந்து தன் படங்களை பதிவிட்டு வருகிறார்.