ஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா காம்பினேஷ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘முள்ளும் மலரும்’, சன் டி.வி.யில் ‘மின்னலே’, விஜய் டி.வி.யில் ‘செந்தூரப்பூவே’ போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பல முன்னணி சீரியல்களில் நடித்திருந்தாலும் தர்ஷா குப்தாவை பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தான்.
தற்போது திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என பெயரிட்டுள்ளார். அதில் தர்ஷா குப்தா நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் தர்ஷா குப்தா அசத்தலான போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
நடிகர் அசோக் குமார் நடிக்கும் புதிய படத்தில் தர்ஷா கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தனது கேரியரில் அடுத்தடுத்த கட்டங்களில் தன்னம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கும் தர்ஷா குப்தா, சமீபத்தில் மீண்டும் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரையில் அடியெடுத்து வைத்துள்ள தர்ஷாவின் புதிய ப்ராஜெக்ட்டுக்காக அவருடைய ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே தொப்புளில் கம்மல் போட்டபடி செம ஹாட் லுக்கில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா கொடுத்துள்ள போட்டோ சூட் செம வைராகி வருகிறது.