மீண்டும் ‘96’ ஜானு தோற்றத்தில் த்ரிஷா.... வைரலாகும் புகைப்படம்

3 years ago 447

நடிகை த்ரிஷா தமிழ் சினிமா நடிகைகள் பட்டியலில் முன்னணியில் இருந்து வருகிறார். 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதையடுத்து பல படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.


2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘ கில்லி’ படத்தில் த்ரிஷா நடித்த தனலட்சுமி என்ற கதாபாத்திரத்திரம் இன்று ரசிக்கக்கூடிய கதாபாத்திரமாக இருக்கிறது.

பின்பு 2016 ஆம் ஆண்டு கொடி படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.அதையடுத்து மோகினி, நாயகி என ஹாரர் படங்களில் நடித்தார்.


தற்போது பொன்னியின் செல்வன், கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி ஆகிய படத்தில் நடித்து முடித்துள்ளார். மலையாளத்தில் ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் ‘ ப்ரிந்தா’ என்ற தெலுங்கு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில் சமூக வலைதளங்களில் நடிகை த்ரிஷா மஞ்சள் நிற உடையில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த காஸ்டியூமில் 96 படத்தில் வரும் ஜானுவை போல் உள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...